சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 2020-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு ஓய்வுபெற்ற ஊழியர்கள் சுமார் 1,000 பேர் ஓய்வுகாலப் பலன்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை, கோவை,சேலம், மதுரை, விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை.
அவர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், ஓய்வுபெற்ற ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோல, போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 86 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அகவிலைப்படியும் உயர்த்தப்படவில்லை. கடந்த 72 மாதங்களாக அகவிலைப்படி தொகை நிலுவையில் இருக்கிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலர் கே.கர்சன் கூறும்போது, ‘‘அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, 2020-ம்ஆண்டு மே மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு இன்னும் ஓய்வூதியப் பலன்களை வழங்கவில்லை. சுமார் 1,000 ஊழியர்கள்,ஓய்வுகாலப் பலன்களுக்காக காத்திருக்கிறார்கள். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி.அதேபோல, ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியும் பலஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இதனால், ஓய்வுபெற்றதொழிலாளர்கள் கவலைக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, தமிழக அரசு ஓய்வு பெற்றவர்களுக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago