ஓட்டல் காவலாளி கொலை வழக்கில் ஓசூரில் சிறுவன் உட்பட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

ஓசூர் சந்திராம்பிகை ஏரி அருகேயுள்ள ஓட்டலில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இரவு மர்ம நபர்கள் புகுந்து அங்கு பணியில் இருந்த காவலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, ஓட்டல் கல்லாவில் இருந்த ரூ.9,500 ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக ஓசூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மேலும், எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று ஓசூர் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஓட்டல் காவலாளி கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள் வந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டதும் தெரிந்தது.

இதையடுத்து, 18 வயது நிரம்பாத சிறுவன் மற்றும் சேக்அப்ரீத் (25), தோஷிப் (19) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்