வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான முதல் அனைத்துலக மாநாடு, மொரீசியஸில் ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொரீசியஸ் பிரதமர் நவின் ராம்கூலம் மாநாட்டை தொடங்கிவைக்கிறார்.
இதுகுறித்து, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான ஒருங்கிணைப் புக் கமிட்டி தலைவரும், மொரீசிய ஸின் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
சுமார் 60 நாடுகளில் பரந்து விரிந்து வாழும், தமிழர்களை பண்பாடு, கலாச்சாரத்தால் இணைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதை யொட்டி இந்த மாநாடு மொரீசிய ஸின் மோகா நகரில் மகாத்மா காந்தி கல்வி நிறுவன வளாகத்தில், ஜூலை 23 முதல் 27 வரை நடை பெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நவின் ரம்கூலம் தொடங்கி வைக்கிறார். 3 நாட்களும் கட்டுரை சமர்ப்பித்தல், கருத்தரங்கம் உள்ளிட்டவை நடக்கின்றன. 60 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் வர விரும்பி பதிவு செய்துள்ளனர். தமிழகத்திலிருந்து மாநாட்டில் பங்கேற்போர் சென்னை சோழிங்க நல்லூரில் செயல்படும் ஆசிய வியல் நிறுவன அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.
தமிழர்கள் மொழியாலும், பண் பாட்டாலும், கலாச்சாரத்தாலும் ஒன்றுபட வேண்டுமென்ற நோக் கத்தில், தமிழ்க் கலாச்சார பாது காப்பு மற்றும் அடையாளப் படுத்துதல் என்ற வகையில் மாநாடு நடைபெறுகிறது. இவ்வாறு ஆறுமுகம் பரசுராமன் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago