தென்னக ரயில்வேயில் மதுரை-சென்னை வைகை விரைவு ரயில்சேவை 15.8.1977 தொடங்கப்பட்டது. மதுரை-சென்னை இடையிலான 497 கி.மீ. தூரத்தை 7 மணி 5 நிமிடத்தில் சென்றடைந்தது சாதனையாக இருந்தது. மதுரையில் இருந்து காலை 7.05-க்கு புறப்படும் ரயில் மதியம் 2.20-க்குசென்னையை சென்றடைய வழக்கமாக 7 மணி 15 நிமிடங்கள் ஆகும்.
ஆனால் மார்ச் 3-ல் வைகை ரயில் சில தொழில்நுட்பக்கோளாறால் மதுரையிலிருந்து 21 நிமிடம் தாமதமாக புறப்பட்டபோதும், 6 மணி 40 நிமிடங்களில் சென்னையை சென்றடைந்ததில் 44 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில் ஓட்டுநர் ரவிசங்கர் கூறும்போது, மதுரையிலிருந்து கடந்த 3-ம் தேதி 21 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டது. நானும் ஓட்டுநர் குபேந்திரனும் ரயில் மேலாளர், சிக்னல் கட்டுப்பாட்டாளர்கள் உதவியுடன் 110 கி.மீ. வேகத்தில் 7 நிலையங்களில் நிறுத்தி விழுப்புரத்துக்கு 11.37 மணிக்கு (வழக்கமாக 11.40 மணி) சென்றுவிட்டோம். அங்கிருந்து சென்னையைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர்கள் திறமையாக செயல்பட்டு மதியம் 2.07-க்கு சென்னையை சென்றடைந்தனர். இதன் மூலம் வழக்கமான நேரத்தைவிட தாமதமாக புறப்பட்டும் முன்கூட்டியே ரயில் சென்றுள்ளது. அனைவரின் ஒத்துழைப்போடு 44 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago