தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டவருவாய் அலுவலரின் நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இரண்டாம் மேல்முறையீட்டு வழக்குகள் தொடர்பான விசாரணை தமிழ்நாடு மாநில பொது தகவல் ஆணையர் ரா.பிரதாப்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மூலம் ஆணையர்கள் மற்றும்தலைமை ஆணையர் உட்பட பல்வேறு அலுவலர்களால் அனைத்து மாவட்டங்களிலும் மனுதாரர்களின் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 61 இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றது.
இதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தராத திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 4 பொது தகவல் அலுவலர்களுக்கு மொத்தம் ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்பான வழக்குகளில் சரியான முறையில் மனுதாரர்களுக்கு பதில் தராமல் மிக மந்தமான வகையில் செயல்பட்டு உள்ளது தெரிய வருகிறது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வட்டாரவளர்ச்சி அலுவலர்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவறுகள் தடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.அமுதா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago