கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்று, 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அதிக வார்டுகளை திமுக கைப்பற்றியது. இந்நிலையில், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்ற, கவுன்சிலர்களை, அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் தங்களது கவுன்சிலர்களை 22-ம் தேதி இரவே சொகுசு பேருந்துகளில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றனர்.
இதில், கிருஷ்ணகிரி நகராட்சியை பொறுத்தவரை 17 திமுக கவுன்சிலர்கள் கடந்த மாதம் 22-ம் தேதி சொகுசு பேருந்தில் வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் கடந்த 2-ம் தேதி கவுன்சிலர்களாக பதவியேற்பதற்காக, பேருந்திலேயே நகராட்சி அலுவல கத்துக்கு அழைத்து வரப்பட்டனர். கவுன்சிலர்கள் பொறுப்பேற்றவுடன், மீண்டும் அவர்கள் பேருந்தில் சென்றனர். நேற்று காலை தலைவர், துணைத் தலைவர் மறைமுகத் தேர்தலுக்கு சொகுசு பேருந்தில் வந்த திமுக கவுன்சிலர்கள் வாக்களித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வெளியே வந்தனர். அப்போது வாசலில் நின்ற சொகுசு பேருந்தைக் கண்ட திமுக கவுன்சிலர்கள் வீட்டுக்குச் செல்வதாக தெரிவித்தனர். இதற்கு இரவு விருந்துடன் அனைவரும் வீட்டிற்கு செல்லலாம் என திமுக நிர்வாகிகள் கூறியதையடுத்து பேருந்தில் ஏறிச் சென்றனர். இதேபோல பேரூராட்சிகளில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் அவர்களது வீடுகளுக்கு 11 நாட்களுக்குப் பின்னர் சென்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago