திமுக, அதிமுகவினர் மோதல்: வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை: திமுக ,அதிமுகவினர் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

கோவை வெள்ளலூர் பேரூரராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித தேர்தலில் அதிமுக 8 இடங்களை பிடித்து வெள்ளலூர் பேரூராட்சியை கைப்பற்றியது. இங்கு திமுகவினர் 6 இடங்களைப் பிடித்தனர். சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தை பிடித்தார்.

வெள்ளலூர் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடக்க இருந்தது. இதில் பங்கேற்பதற்காக அதிமுக உறுப்பினர்கள் இன்று காலை காரில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது இவர்களை சிலர் மறித்து கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

அதேபோல், திமுக கவுன்சிலர்கள் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் ,தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போத்தனூர் போலீஸார் இருதரப்பு மோதலை விலக்கி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மறைமுகத் தேர்தலுக்கு கவுன்சிலர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வர முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சூழல் உள்ளதால் தேர்தலை ஒத்தி வைப்பதாக வெள்ளலூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கு வந்து அதிமுகவினரிடம் விசாரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்