சென்னை: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் ஆண்டுப் பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினரான கிஷோர்குமார் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கான தேர்தல் உரிய விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில் அதற்கு அவகாசம் அளிக்காமல் அவசர, அவசரமாக தேரதல் நடத்தப்பட்டது.
தேர்தலை முறையாக நடத்தாத நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறப்படும் உறுப்பினர்களை வைத்து பொதுக்குழுவை கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பளித்தார். அதில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் 77-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago