சிவகாசி மாநகராட்சியில் வெற்றிபெற்ற 11 பேரில் 9 அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்தனர்

By செய்திப்பிரிவு

விருதுநகர்: சிவகாசி மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் திமுகவில் நேற்று இணைந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தின் முதல் மாநகராட்சியான சிவகாசியில், தேர்தல் முடிந்து இன்று கவுன்சிலர்கள் அனைவரும் பொறுப்பேற்க உள்ளனர். மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 24, அதிமுக 11, காங்கிரஸ் 6 , பாஜக, விசிக, மதிமுக தலா ஒரு வார்டுகளிலும் 4 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றிபெற்றன.

இந்நிலையில், அதிமுக 1-வது வார்டு கவுன்சிலர் செல்வம், 2-வது வார்டு சசிக்குமார், 4-வது வார்டு அழகுமயில், 6-வது வார்டு நியா, 7-வது வார்டு சேதுராமன், 13-வது வார்டு மாரீஸ்வரி, 14-வது வார்டு சாந்தி, 17-வது வார்டு நிலானி, 21-வது வார்டு சந்தனமாரி ஆகியோர் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். தற்போது 2 கவுன்சிலர்கள் மட்டுமே அதிமுகவில் உள்ளனர்.

மேலும், திருத்தங்கல் முன்னாள் அதிமுக நகரச் செயலர் பொன்.சக்திவேல், முன்னாள் ஒன்றியச் செயலர் பலராமன், முன்னாள் கவுன்சிலர்கள் ரவிசெல்வம், ரமணா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்