மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான சக்கர நாற்காலி வாள்வீசும் போட்டியில் தமிழகம் வெற்றி

By செய்திப்பிரிவு

தாம்பரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான 14-வது தேசிய அளவிலான சக்கர நாற்காலி வாள்வீசும் போட்டிகள் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரம் நகரில் கடந்த மாதம் 25 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது.

இப்போட்டியில் 18 மாநிலங்களிலிருந்து மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் 16 பேர் மற்றும் அவர்களது உதவியாளர்கள் என 27 பேர் கலந்து கொண்டனர்.

இக்குழுவின் மேலாளராக தாமோதரன், பயிற்சியாளராகப் பார்த்திபன், கேப்டன் சந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தனிநபர் பெண் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் சார்பாக பாயில் பிரிவில் புனிதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான தனிநபர் எப்பி பிரிவில் சிராந்தி வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஆண்களுக்கான குழு போட்டியில் பாயில் பிரிவில் ஜோசப் சுரேஷ், நூருதீன், கோகுல கண்ணன், சுரேஷ் ஆகியோர் கொண்ட குழு வெண்கலப் பதக்கம் பெற்றது.

மேலும் பெண்களுக்கான குழு போட்டியில் எப்பி பிரிவில் சிராந்தி, லதா, பானுப்பிரியா, சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்