தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மணற்சிற்பம் வடித்து நெல்லூர் கலைஞர் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மணற்சிற்பம் அமைத்து, நெல்லூர் மணற்சிற்பக் கலைஞர் ஒருவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். அவர் தனது 69-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் எம்.சனத்குமார் நெல்லூரை அடுத்த ஏருரு என்ற பகுதியில் முதல்வர் ஸ்டாலின் உருவத்தை மணற்சிற்பமாக வடித்துள்ளார். ஸ்டாலின் உருவத்திற்கு அருகே ''Happy Birthday to MKStalin Sir'' என்று வண்ணமயமாக குறிப்பிட்டார். இந்த மணற்சிற்பம் அப்பகுதியில் கவனம் ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்