தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுங்கள்: ஸ்டாலினுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ''தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுங்கள்'' என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாள். அவர் தனது 69-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்ட, பிரதமர் நரேந்திர மோடியை தமது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, "தமிழகத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்" என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழக முதல்வர், "தங்களின் ஒத்துழைப்புடன் நான் தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைப்பேன்" என உறுதியளித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து: கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். வரலாற்றுச் சிறப்புமிக்க கேரள-தமிழக உறவினை மேலும் வலுப்படுத்தவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்