சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், ''தமிழகத்தில் சாலைகள் அமைப்பதற்கான மண் பற்றாக்குறையால் 1572 கிலோ மீட்டர் நீளத்திற்கான 45 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடங்கிக் கிடப்பதாகவும், அவற்றை விரைவுபடுத்த ஒத்துழைக்கும்படியும் தலைமைச் செயலருக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். நெடுஞ்சாலைப் பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 8.70 கோடி கன அடி மண் தேவைப்படும் நிலையில், இப்போது வழங்கப்படும் வேகத்தில் மண் வெட்ட அனுமதி வழங்கப்பட்டால் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த பணிகள் முடியாது என்பதால், அனுமதி வழங்குவதை அரசு விரைவுபடுத்த வேண்டும்.
நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதில் நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், மண் அள்ளுவதற்கான அனுமதியையும் தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துவதில் மத்திய அரசுக்கு ஒத்துழைத்து, அதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்க வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
» உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் டி.என்.பி.எஸ்.சி செயல்படுவதா?- ராமதாஸ் கேள்வி
» மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்: ரஜினி, கமல் வாழ்த்து
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago