அருப்புக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு தொகுதிக்கு 10 ஆயிரம் பேரை அழைத்துவர உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.
விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாத புரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 14 தொகுதி அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்கான பொதுக்கூட்டம் அருப்புக்கோட்டையில் நாளை நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா 14 தொகுதி அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.
இதற்காக அருப்புக்கோட்டை நான்குவழி சாலை காந்திநகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு பொதுக்கூட்டத்துக்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழா மேடைக்கு 500 மீட்டர் தூரத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விழா மேடைக்கு ஜெயலலிதா காரில் வருவதற்காக தார்ச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. விழா மேடை உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக கான்கிரீட் போடப்பட்டு அதன்மேல் இரும்புக் குழாய்களைக் கொண்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உயர் மின் அழுத்த கம்பிகள் தரையில் புதைக்கப்பட்டிருந்தன. மேலும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து நான்குவழி சாலையின் இருபுறமும் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு அதிமுக கொடிக் கம்பங்கள் நடப்பட்டிருந்தன.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இவை செய்யப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்ததால், அவசரமாக நேற்று புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின் கம்பிகள் மேலே செல்லும்படி இணைப்புகள் கொடுக்கப்பட்டன. அதோடு, நான்குவழி சாலையில் நடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக கொடிக் கம்பங்களும் உடனடியாக அகற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தலா 10 ஆயிரம் பேரை திரட்டிவர மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம். தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு வாகனத்தில் ஆட்களை அழைத்துவரவும், நகரப் பகுதியிலிருந்து வார்டுக்கு ஒரு வேனில் ஆட்களை அழைத்துவரவும் தலைமையிடம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கான செலவினங்களை மேற்கொள்ள கிராமப்புறங்களில் ஒன்றியத் தலைவர், நகரப் பகுதியில் நகர்மன்றத் தலைவர் போன்ற உள்ளாட்சிப் பொறுப்புகளில் உள்ளோருக்கும், நகர், மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்.
மேலும், விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் வெயில் தாங்க முடியாமல் 2 பேர் மயங்கி விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்காக கூரையோ, சாமியானா பந்தலோ அமைக்கப்படவில்லை. மேலும், கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்காக குடிநீர், கழிப்பட வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago