தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப.மாணிக்கனார்: நூற்றாண்டு இன்று தொடக்கம்

By குள.சண்முகசுந்தரம்

தமிழுக்காகவே தன்னை அர்ப் பணித்துக்கொண்ட மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது.

11 வயதில் ஆறாம் வகுப்போடு வட்டிக் கடை கணக்குப் பிள்ளை யாக பர்மாவுக்குச் சென்றார் வ.சுப. அங்கே, ‘உண்மையை மட்டுமே பேசுவேன்’ என்றதால் 18 வயதில் பர்மா இவரை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பியது. ஊருக்கு வந்ததும் தமிழ் படிக்க ஆசைப்பட்டவர், பண்டிதமணி கதி ரேசனாரின் கருணையால் சிதம் பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சேர்ந்து புலவர் (பி.ஓ.லிட்) படிப்பில் முதல் மாணவ ராக வந்து, அங்கேயே ஆசிரிய ரானார். பிறகு, 1948-ல், காரைக் குடி அழகப்பா கல்லூரியில் விரி வுரையாளராகச் சேர்ந்து, பேராசிரி யராக வளர்ந்து, அக்கல்லூரியின் முதல்வராக உயர்ந்தவர். 1970-ல் மீண்டும் அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கே திரும்பி, மொழிப்புல முதல்வராக அங்கீகரிக்கப்பட்டார்.

வள்ளல் அழகப்பர் பற்றி வ.சுப. எழுதிய ‘கோடி கொடுத்த கொடை ஞன்’ என்ற நெக்குருகும் வாழ்த் துப்பாதான் அழகப்பா பல்கலை.யின் நிறுவனர் வாழ்த்தாக இன்றள வும் உள்ளது. சங்க இலக்கியங் களில் அகத்திணை குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதி பி.எச்.டி, பட்டம் பெற்றார். 1979-ல் காமராசர் பல்கலை. துணைவேந்தராக நிய மிக்கப்பட்ட இவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கிய போது அதன் அமைப்புக் குழு தலைவராகவும் இருந்தார்.

திருவள்ளுவர் விருது

யாப்பிலக்கணம் குறித்து ஆய் வுக் கட்டுரைகள் எழுதிக்கொண்டி ருந்தபோது நேர்முகத் தேர்வு ஒன் றுக்காக புதுச்சேரிக்கு சென்றிருந்த வ.சுப., அங்கே திடீரென உடல் நலன் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். நாடக நூல்களில் ஆரம் பித்து 32 நூல்களை எழுதி இருக் கிறார். 2007-ல் இவரது நூல்களை அரசுடமை ஆக்கிய தமிழக அரசு, 1990-ல் திருவள்ளுவர் விருது வழங்கி கவுரவித்தது.

தமிழ்வழிக் கல்விக்காக தனி இயக்கம் தொடங்கிய மாணிக்க னார், மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் யாத்திரை நடத்தினார். தமிழும் தில்லை அம்பலத்தில் அரங்கேற வேண்டும் என போராட் டங்களை முன்னெடுத்தார். எந்த வொரு காரியத்தையும் ‘உ’ ‘சிவமயம்’ போட்டு எழுதும் மரபை உடைத்து ‘த’ (தமிழ்) என்று போட்டு எழுதி தமிழுக்கு அணி சேர்த்தார்.

விருப்ப முறி

தனது வீட்டு நூலகத்தில் இருந்த சுமார் 10,000 நூல்களை அழகப்பா பல்கலை.க்கு தர வேண்டும் எனவும் தனது சொத்தில் ஆறில் ஒரு பகுதியை, தான் பிறந்த ஊரான மேலச்சிவல்புரியின் வளர்ச்சிக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் விருப்ப முறி (உயில்) எழுதி வைத்திருந்தார். தந்தையின் விருப்பத்தை இன்றள வும் நிறைவேற்றி வருகிறார்கள் அவரது வாரிசுகள்.

வ.சுப.மாணிக்கனார் 23 ஆண்டு கள் பணி செய்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அவரது நூற்றாண்டு விழா தொடக் கத்தை நாளை கொண்டாடுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு வரு டத்துக்கு தமிழகம் மற்றும் புதுச் சேரியில் உள்ள மற்ற பல்கலைக் கழகங்களும் விழாவை கொண்டா டுகின்றன.

காலம் அழைத்தது

‘‘நேர்மை, எளிமை, உண்மை யாக வாழ்ந்த அப்பா, திருக்குற ளைப் போலவே இரண்டு அடியில் ஆயிரம் குறட்பாக்களை எழுதத் தொடங்கினார். 578 குறட்பாக்கள் எழுதிக்கொண்டிருக்கும்போதே அவரை காலம் அழைத்துக் கொண்டது. அந்த குறட்பாக்களை ‘மாணிக்கக் குறள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டோம். 7 ஆண்டுகள் முயற்சியில் தற்சிந்தனைகள் என்ற தலைப்பில் தனது வாழ்க்கை குறிப்பை அப்பா எழுதி வைத்திருந்தார்.

நாளை அந்த நூலை நாங்கள் வெளியிடுகிறோம். எங்களது சொந்த ஊரில் அப்பா வுக்கு திருவுருவச் சிலை நிறுவி நூற்றாண்டு விழாவை நிறைவு செய்ய இருக்கிறோம்’’ என்கிறார் வ.சுப.மாணிக்கனாரின் மகள் தென்றல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்