சென்னை: உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்டம் தொடர்பான புகைப்படக் காட்சியை இன்று சென்னை நந்தனத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: " இந்த புகைப்பட காட்சியில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அறியப்படாத பல வீரர்கள் இதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
உக்ரைனில் கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களை இந்தியா அழைத்து வருவது என்பது சாதரண விஷயமல்ல, அதுவொரு சவால் மிக்க பணி. ஏனென்றால், அங்கு போர் நடந்து கொண்டிருக்கிறது.
» திண்டுக்கல் சேவல் கண்காட்சியில் வலம் வந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவல்
» 'ஹிட்லரை வீழ்த்தினோம்; புதினையும் வீழ்த்துவோம்': உக்ரைன் வெளியுறவு அமைச்சர்
அந்த போர்ப் பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்றிக் கொண்டு வருவது என்ற சவாலான பணியை நமது பாரத பிரதமர், நரேந்திர மோடி ஏற்றுள்ளார். அவரது தலைமையில் இந்தியர்களின் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தைத் தொடர்ந்து, நம் இந்திய மாணவர்களை மீட்கும் பணியானது துரிதமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago