திருச்செந்தூர் கோயில்: உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி வசூல்

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் முதன்முறையாக ரூ.3 கோடியைத் தாண்டியது.

கோயில் இணை ஆணையர் (பொ) குமரதுரை தலைமையில், உண்டியல்களைத் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாட சாலை உழவாரப் பணிக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.2,83,25,389, கோசாலை பராமரிப்பு உண்டியலில் ரூ.2,03,496, யானை பராமரிப்பு உண்டியலில் ரூ. 5,233, கோயில் அன்னதான உண்டியலில் ரூ.18,60,290, சிவன் கோயில் உண்டியலில் ரூ.17,956, நாசரேத் கோயில் உண்டியலில் ரூ.1,257, குலசேகரன்பட்டினம் கோயில் உண்டியலில் ரூ.2,654 என, மொத்தம் ரூ.3,04,16,275 காணிக்கையாக கிடைத்தது. மேலும், தங்கம் 2,284 கிராம், வெள்ளி 26,517 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 132 கிடைத்தன.

இதுவே முதல்முறை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதன் முறையாக உண்டியல் காணிக்கை வசூல் ரூ.3 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 7-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மாசி திருவிழா நடந்ததால், காணிக்கை அதிகம் கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்