ஆம்பூர்: வீட்டு பாடம் எழுதாத யுகேஜி மாணவருக்கு பிரம்படி: தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம்

By செய்திப்பிரிவு

ஆம்பூர் அருகே வீட்டுப்பாடம் எழுதாத யுகேஜி மாணவரை பிரம்பால் அடித்த தனியார் பள்ளி ஆசிரியை பணி நீக்கம் செய்யப் பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மாதனூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமாரின் 5 வயது மகன் சர்வீன் என்பவர் யுகேஜி படித்து வருகிறார்.

மாணவர் சர்வீன் வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி வகுப்பு ஆசிரியை சத்யா என்பவர் பிரம்பால் நேற்று முன்தினம் அடித் துள்ளார். இதில், மாணவனின் கை மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதி யில் காயம் ஏற்பட்டுள்ளது.

பெற்றோர் தர்ணா

வீட்டுக்குச் சென்ற மாணவரின் உடலில் ஏற்பட்டிருந்த காயத்தை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி யடைந்தனர். ஆசிரியையின் நடவடிக்கையை கண்டித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று சென்று கேள்வி எழுப்பினர். இதற்கு, பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவரை பிரம்பால் அடித்த ஆசிரியை சத்யாவை பணி நீக்கம் செய்வதாக பள்ளி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.

இதனையேற்று, மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்