ஈஷாவில் மார்ச் 1-ல் மஹா சிவராத்திரி கொண்டாட்டம் - ‘மிஸ்டு கால்’ கொடுத்தால் ருத்ராட்சை வீடு தேடி வரும்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரிவிழா மார்ச் 1-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதுதொடர்பாக ஈஷாஅறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா மார்ச் 1-ம் தேதி ஆதியோகி சிலை முன்பு நடைபெற உள்ளது. ஆதியோகியின் அருளைப் பெறும் விதமாக சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

ருத்ராட்ச பிரசாதத்தை வீட்டிலேயே பெறுவதற்கு 83000 83000 என்றஎண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ருத்ராட்சத்துடன் சேர்த்துதியானலிங்கத்தில் வைத்து சக்தியூட்டப்பட்ட விபூதி, பயத்தை நீக்கி,ஒருவரின் குறிக்கோளை நிறைவேற்றஉதவும் அபய சூத்ரா, ஆதியோகியின் புகைப்படம் ஆகியவை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஈஷாவில்வழங்கப்படும் ஐந்துமுக ருத்ராட்சத்தை ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் அணிந்து கொள்ளலாம்.

மஹா சிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து சத்குரு கூறும்போது, ‘‘மஹா சிவராத்திரி தினம் இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு மகத்தான அன்பளிப்பு. இந்த ஒரு புனித இரவில்நீங்கள் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருந்தால் மகத்தான நன்மைகளை பெற முடியும். இந்த நன்மை தமிழ் மக்கள் அனைவருக்கும் சேரவேண்டும் என்பது என்னுடைய ஆசை, அருள்” என்றார்.

இவ்விழா மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும். சத்குரு முன்னிலையில் தியானலிங்கத்தில் பஞ்ச பூத ஆராதனையுடன் விழா தொடங்கும். பின்னர், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணைக் கவரும்ஆதியோகி திவ்ய தரிசன காட்சியும் நடைபெறும். மேலும், மக்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்திருக்க புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற உள்ளன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மிகக் குறைவான மக்கள் மட்டுமே இவ்விழாவில் நேரில் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே நேரலையில் பங்கேற்கலாம். இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனலான Sadhguru Tamil–ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ-டியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்