மதுராந்தகம்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் பாலாறு மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்கெனவே மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்கின்றன என்றும், போக்குவரத்தில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை என்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அருகே பாலாற்றின் மீது 2 மேம்பாலங்கள் உள்ளன. இந்தமேம்பாலங்கள் சேதமடைந்ததால் சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் செல்லும் வாகனங்கள் மட்டும் ஒரு பாலத்தில் அனுமதிக்கப்பட்டன. மற்றொரு பாலத்தில் சீரமைப்புப் பணி நடைபெற்று வந்தது. இதனால், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் மெய்யூர் அருகே திருப்பி விடப்பட்டு, காவித்தண்டலம், பழத்தோட்டம், ஆத்தூரில் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலைக்கு வந்து அங்கிருந்து செங்கல்பட்டு சென்று சென்னை சென்றன. தற்போது ஒரு பாலத்தைச் சீரமைக்கும் பணி நிறைவுற்றுள்ளது.
எனவே சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் சீரமைக்கப்பட்ட பாலத்தின் வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன. ஏற்கெனவேவாகனங்கள் சென்ற பகுதியில் சீரமைப்பு பணி தொடங்கியுள்ளது. திருச்சியிலிருந்து சென்னை வரும் வாகனங்கள் வழக்கம்போல் மெய்யூர் வழியாக ஆத்தூர் வந்தே சென்னை செல்கின்றன. போக்குவரத்தில் எந்தவித புதிய மாற்றமும் செய்யப்படவில்லை என்று நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 secs ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago