காரைக்குடி: தலைவர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி: மூன்று பேர் கேட்பதால் இழுபறி

By இ.ஜெகநாதன்

காரைக்குடி நகராட்சியில் தலைவர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. 3 பேர் கேட்பதால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

காரைக்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக-18, காங்கிரஸ் -3, அதிமுக-7, இந்திய கம்யூ. கட்சி-1 சுயேச்சைகள் 7 இடங்களை வென் றுள்ளன. இந்நிலையில் 1-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார். இதனால் கட்சியின் பலம் 19-ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுயேச்சைகள் சிலரையும் இணைக்க பேச்சு நடக்கிறது.

திமுக பெரும்பான்மை பெற் றுள்ள நிலையில் அக்கட்சி நகரச் செயலாளர் குணசேகரன், முன்னாள் நகராட்சித் தலைவர் முத்துத்துரை, முன்னாள் எம்எல்ஏ துரைராஜ் மகன் ஹரி தாஸ் ஆகியோர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பனிடம் நக ராட்சித் தலைவர் பதவியை கோரி வருகின்றனர்.

காரைக்குடி பெரு நகராட்சி ஓரிரு ஆண்டுகளில் மாநகராட்சியாகத் தரம் உயர வாய்ப்புள்ளதால் தலைவர் பதவி முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க மூன்று பேரும் தயாராக இல்லை. மேலும் அவர்கள் தனித்தனியாக கவுன்சிலர்களை தங்களுக்கு ஆதரவாக திரட்டி வருகின்றனர்.

இதனால் தலைவர் பதவி யாருக்கு என்பதை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. மேலும் திமுக தலைமை அறிவிக்கும் நபரை எதிர்த்து, திமுக போட்டி வேட் பாளர் நின்றால் அவரை ஆதரிக்க அதிமுக கவுன்சிலர்கள் தயாராக உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்