துணை மேயர் வாய்ப்பு நழுவினால் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் பதவியை பெற காங்கிரஸ் முயற்சி

மதுரை மாநகராட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 67 வார்டுகளிலும், காங்கிரஸ் 5, மார்க்சிஸ்ட் 4, மதிமுக 3, விடுதலைச் சிறுத்தைகள் 1, திமுக ஆதரவு பெற்ற சுயேச்சை ஒருவர் என மொத்தம் 81 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கியதில் 5-ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 77-வது வார்டில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ பிரதாபன் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் துணை மேயர் பதவியைக் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சி செய்கிறது. இதற்காக அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் நிர் வாகி ஒருவர் கூறுகையில், மதுரை மாநகராட்சியில் துணை மேயர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம். அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் மண்டலத் தலைவர் பதவியை பெற முயற்சிப்போம் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE