சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 108-வது வார்டு, மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டு மற்றும் திருப்பூர் மாநகராட்சியின் 8-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற 3 கவுன்சிலர்கள், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூர் மத்திய மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி 8-வது வார்டில், சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர் வேலம்மாள் இன்று காலை சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதேபோல், சென்னை தெற்கு மாவட்டம், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சென்னை மாநகராட்சி 108-வது வார்டு கவுன்சிலரும், அதிமுக கட்சியின் மாவட்ட பொருளாளருமான லியோ சுந்தரம் திமுகவில் இணைந்தார்.
மதுரை மாநகராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுரை மாநகராட்சி 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் திமுகவில் இணைந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago