உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவர்களை மீட்க மத்திய அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழலையை கருத்தில் கொண்டு அங்கு கல்வி கற்கும் புதுவை மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகமம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் புதுவை முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து புதுவை அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு அங்கு படிக்கும் புதுச்சேரி மாணவர்கள், பத்திரமாக வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர்கள் முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் நாட்டிலுள்ள இந்தியாவுக்கான தூதர் பார்த்த சத்பதி ஆகியோரை இன்று தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிகிறது. அப்போது உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை பத்திரமாக மீட்டு புதுச்சேரிக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளார்."

இவ்வாறு புதுவை அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE