நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு சதவீதம்: முதல் மூன்று இடங்களில் திமுக, அதிமுக, பாஜக

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் பிடித்தது. இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதத்திலும் திமுக மிகப் பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக இரண்டாவது இடத்தில் உள்ளது. பாஜக கவனிக்கத்தக்க வாக்கு சதவீதம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் திமுக களம் கண்டது. பாஜக கழண்டுகொண்ட நிலையில், இதரக் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இந்தத் தேர்தல் களத்தைச் சந்தித்தது. பாஜக, அமமுக, பாமக, தேமுதிக, மநீம, நாதக ஆகியவை தனித்தனியாகக் களத்தில் நின்றன. தற்போது கட்சி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளிவந்துள்ளது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர் (வாக்கு சதவீதம்)

திமுக - 43.59%
அதிமுக - 24%
பாஜக - 7.17%
காங்கிரஸ் - 3.16%
நாம் தமிழர் கட்சி - 2.51%
மக்கள் நீதி மய்யம் - 1.82%
பாட்டாளி மக்கள் கட்சி - 1.42%
அமமுக - 1.38%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1.31%
தேமுதிக - 0.95%
மதிமுக - 0.90%
இந்திய கம்யூனிஸ்ட் - 0.88%
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 0.72%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 0.27%
சமத்துவ மக்கள் கட்சி - 0.04%
பகுஜன் சமாஜ் - 0.24%
ஆம் ஆத்மி கட்சி - 0.07%
இந்திய ஜனநாயகக் கட்சி - 0.06%
மனிதநேய மக்கள் கட்சி - 0.02%
புதிய தமிழகம் - 0.01%

நகராட்சி வார்டு உறுப்பினர் (வாக்கு சதவீதம்)

திமுக - 43.49%
அதிமுக - 26.86%
பாஜக -3.31%
காங்கிரஸ் - 3.04%
நாம் தமிழர் கட்சி - 0.74%
மக்கள் நீதி மய்யம் - 0.21%
பாட்டாளி மக்கள் கட்சி - 1.64%
அமமுக - 1.49%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 0.82%
தேமுதிக - 0.67%
மதிமுக - 0.69%
இந்திய கம்யூனிஸ்ட் - 0.38%
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 0.62%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 0.64%
சமத்துவ மக்கள் கட்சி - 0.02%
பகுஜன் சமாஜ் - 0.10%
ஆம் ஆத்மி கட்சி - 0.02%
இந்திய ஜனநாயகக் கட்சி - 0.08%
மனிதநேய மக்கள் கட்சி - 0.11%
புதிய தமிழகம் - 0.06%

பேரூராட்சி வார்டு உறுப்பினர் (வாக்கு சதவீதம்)

திமுக - 41.91%
அதிமுக - 25.56%
பாஜக - 4.30%
காங்கிரஸ் - 3.85%
நாம் தமிழர் கட்சி - 0.80%
மக்கள் நீதி மய்யம் - 0.07%
பாட்டாளி மக்கள் கட்சி - 1.56%
அமமுக - 1.35%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1.34%
தேமுதிக - 0.55%
மதிமுக - 0.36%
இந்திய கம்யூனிஸ்ட் - 0.44%
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 0.61%
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 0.14%
சமத்துவ மக்கள் கட்சி - 0.01%
பகுஜன் சமாஜ் - 0.04%
இந்திய ஜனநாயகக் கட்சி - 0.01%
மனிதநேய மக்கள் கட்சி - 0.14%
புதிய தமிழகம் - 0.04%

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்