புதுச்சேரி: காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சுகாதார ஊழியர்கள் 1 மணி நேரம்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனை ஆகிய மருத்துவ மனைகளில் சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மத்திய கூட்டமைப்புத் தலைவர் அன்பு செல்வன் தலைமை வகித்தார்.
அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். முன்னதாக சுகாதார ஊழியர்
மத்திய கூட்டமைப்பு பொருளாளரும், சுகாதார ஊழியர் கடன் சங்கத் தலைவருமாகிய கணபதி மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனிடையே, போராட்டம் தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், "ஆளுநர் மற்றும் முதல்வர் ஒப்புக்கொண்டு அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும் இதுவரை தேசிய சுகாதார இயக்கம் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் உயர்த்தி தரப்படவில்லை. காலி பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை நிர்வாகம் முழு மனதோடு ஈடுபாடு காட்டவில்லை. அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பிவிட்டதாகக்கூறி செவிலியர் படி, நோயாளி பராமரிப்பு படி உள்ளிட்ட உயர்த்தப்பட்ட அலவன்ஸ்களை அனுப்பாமல் சுகாதாரத்துறை காலம் தாழ்த்துகிறது.
» 'பத்திரிகையாளர் நல வாரியம்' அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
» உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா
இதுபோல் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்கட்டமாக 4 அரசு மருத்துவமனைகளில் போராட்டம் நடந்தது. இரண்டாம் கட்ட போராட்டத்தை காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்பாக நடத்தவுள்ளோம்" என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago