வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல, இடஒதுக்கீட்டை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் நடைபெற்றது.

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் கே.எம்.விஜயன், ராஜிவ் தவான், பாலசுப்பிரமணியம் ஆகியோர், "வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதாக இருந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மக்களைப் பிரிக்கும் வகையிலான உள் இடஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது" என்றனர்.

இதேபோல, முக்குலத்தோர் புலிப்படை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சஞ்சய் விஷன், ராஜராஜன் ஆகியோரும், மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்