‘பிரதம மந்திரி முத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி ரூ.15 ஆயிரத்து 496 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 47.81 லட்சம் சிறு, குறு தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர்.
நாட்டில் சிறு தொழில் களுக்கு வங்கிக் கடன் அவ் வளவு எளிதாக கிடைப்ப தில்லை. எனவே சிறு, குறு தொழில் முனைவோர் தனியார் நிதி நிறுவனங்களை நாடுகின் றனர். அங்கு அதிக வட்டியில் கடன் வழங்கப்படு வதால் பலர் கடன் பெற தயக் கம் காட்டுகின்றனர். இதனால் நாட்டில் சிறுதொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு அதிக ரிக்கவில்லை.
இந்நிலையைப் போக்க கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ‘பிரதம மந்திரி முத்ரா யோஜனா’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ‘முத்ரா' வங்கி திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வர்த்தக வங்கிகள் வழங்கும் கடன் தொகையை மறு நிதியாக அந்த வங்கிகளுக்கு முத்ரா வங்கி அளிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக, முத்ரா வங்கிக்கு மத்திய அரசு ரூ.25 ஆயிரம் கோடியை ஒதுக்கியது. இத்திட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதற்காக நாடு முழுவதும் முத்ரா வங்கி அலுவலகங்கள் திறக்கப்பட்டன. முத்ரா வங்கி குறித்து சிறு தொழில் செய்வோரிடமும், வங்கிகள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
3 திட்டங்கள் அறிமுகம்
இதன்படி, ரூ.50 ஆயிரம் வரை சிசு கடன் திட்டம், ரூ.5 லட்சம் வரை கிஷோர் கடன், ரூ.10 லட்சம் ரூபாய் வரை தருண் கடன் திட்டம் என மூன்று வகையான கடன் திட்டங்கள் முத்ரா வங்கியில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த ஓராண்டில் ரூ.10 ஆயிரத்து 545 கோடி கடன் வழங்க தமிழகத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கைவிட கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து மாநில அளவி லான வங்கிகள் கூட்டமைப் பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
முத்ரா வங்கி தொடங்கப் பட்ட பின் 26 பொதுத்துறை வங்கிகள், 2 தனியார் வங்கி கள், 10 கிராமிய வங்கி களுடன் ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளது. கடந்த ஓராண்டில் ரூ.10 ஆயிரத்து 545 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டது.
ஆனால், கடந்த மார்ச் 31-ம் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில் தமிழகத் தில் 47.81 லட்சம் சிறு, குறு தொழில் முனைவோர் கடன் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 496 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 150 சதவீதம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே கிராமப்புற மக்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago