திருவண்ணாமலை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிட்ட திமுக மற்றும் பாமக சார்பில் போட்டியிட்டு 3 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் திமுக சார்பில் 18-வது வார்டில் மோகனவேல் மற்றும் 13-வது வார்டில் அவரது மனைவி பேபி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இதேபோல் பாமக சார்பில் 12-வது வார்டில் சீனுவாசன், 20-வது வார்டில் அவரது மனைவி பத்மபிரியா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இதனிடையே, இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தம்பதிகள் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல் சேத்துப்பட்டு பேரூராட்சியில் திமுக சார்பில் 6-வது வார்டில் நகர செயலாளர் முருகன் மற்றும் 3-வது வார்டில் அவரது மனைவி சுதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். ஒரே தேர்தலில் ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று தம்பதியினர் வெற்றிப் பெற்றுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வெற்றி பெற்றுள்ள மூன்று தம்பதியினருக்கும், அனைத்து தரப்பு மக்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago