கள்ளக்குறிச்சி நிலவரம்: 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளைக் கைப்பற்றும் திமுக 

By ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 5 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.

அதன்படி வடக்கனந்தல் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் போட்டியின்றி 7 திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்ற நிலையில், 11 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 11 வார்டுகளிலும் திமுக வெற்றிபெற்று வடக்கனந்தல் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

அதேபோன்று 15 வார்டுகளைக் கொண்ட மணலூர்பேட்டை பேரூராட்சியில் 11 வார்டுகளை திமுகவும், 3 வார்டுகளை அதிமுகவும், சுயேச்சை ஒரு வார்டும் வெற்றிபெற்ற நிலையில், மணலூர்பேட்டை பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

15 வார்டுகளைக் கொண்ட தியாகதுருகம் பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 14 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், தேமுதிக ஒரு வார்டிலும், திமுக 13 வார்டுகளிலும் வெற்றுபெற்று தியாகதுருகம் பேருராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மேலும், 18 வார்டுகளைக் கொண்ட சின்னசேலம் பேரூராட்சியில் 5 வார்டுகளில் அதிமுகவும், காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் தலா 1 வார்டிலும்,திமுக 10 வார்டுகளிலும் வெற்றிபெற்று, சின்னசேலத்தை திமுக கைப்பற்றியுள்ளது.

அதேபோன்று 15 வார்டுகளைக் கொண்ட சங்கராபுரம் பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 11 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், அதிமுக, சுயேட்சைகள் தலா 2, பாம, அமமுக, காங்கிரஸ் தலா 1 வார்டிலும், திமுக 7 வார்டுகளிலும் வெற்றிபெற்று சங்கராபுரத்தையும் கைப்பற்றி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய 3 நகராட்சிகளிலும் உள்ள 72 வார்டுகளில் 40 வார்டுகளில் திமுக கைப்பற்றியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE