தஞ்சாவூர், கும்பகோணம் நிலவரம்: ஆதிக்கம் செலுத்தும் திமுக, சில இடங்களில் அமமுக

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியின் 51 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரத்தநாடு பேரூராட்சியில் இதுவரை எண்ணப்பட்ட 7 வார்டுகளில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5 இடங்களையும், திமுக, அதிமுக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிகள் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 11 வார்டுகளை திமுகவும், இரண்டு வார்டுகளை அ.ம.மு.க.வும் 2 வார்டுகளை சுயேச்சையும் வெற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி 11 வார்டில் திமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் வெற்றி; தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு 12 -ல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

அதிராம்பட்டினம் நகராட்சியில் இதுவரை எண்ணப்பட்ட 7 வார்டுகளில், 5 இடங்களை திமுகவும், தலா ஒரு இடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரத்தநாடு 9-வது வார்டில் அதிமுக வேட்பாளர் அமுதா வெற்றி; தஞ்சாவூர் மாநகராட்சி 10-வது வார்டு திமுக வேட்பாளர் புண்ணியமூர்த்தி வெற்றி.

கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 இடங்களில், 14 வார்டுகளில் திமுக 10 இடங்களையும், சுயச்சை இரு இடங்களையும், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடங்களை கைப்பற்றியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்