திமுக தொண்டரை தாக்கிய வழக்கு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. அன்றைய தினம் ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும், அவரது கையை கட்டும்படியும் கூறிய ஜெயக்குமார், அந்த நபரை சட்டையின்றி சாலையில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகின. ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுக தொண்டர் என்பது தெரிய வருகிறது.

இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், ஜெயக்குமார் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரின்பேரில் திமுக தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அவரை சென்னை எழும்பூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயக்குமார் கைது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சில நிமிடங்கள் முன்பு தான் "கள்ள ஓட்டு போட்ட திமுககாரங்களை பிடிச்சு கொடுத்ததற்கு என்மீதே வழக்கா..?

திமுககாரர்கள் கள்ள ஓட்டு போட்டதை பார்த்த, வாக்குச்சாவடி மைய அலுவலரின் வாக்குமூலமே இதற்கு சாட்சியாக இருக்கு... இதுக்கு என்ன சொல்லப்போறீங்க முதல்வர் அவர்களே..." என்று ஜெயக்குமார் டுவீட் பதிவிட்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்