சென்னை: செல்வ வரி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சேர்ப்பது குறித்து பதில் அளிக்க அவரது வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, தீபக் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2008 - 2009-ம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax) தொடர்பான கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர், அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கடந்த 2008ம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு, கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா காலமாகிவிட்டதால், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாரயணபிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம், வருமானவரித் துறை தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
» வாக்கு எண்ணிக்கையிலும் ஆளும் கட்சிக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் துணைபோகும் அவலம் தொடருமா? - அண்ணாமலை
» அறங்காவலர் இல்லாத கோயில்களில் ஊழியர்களை நியமித்ததில் சட்டவிரோதம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்
இதையடுத்து வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago