மதுரை: தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாரத்தின் முதல் நாள் என்பதால் வேலைக்குச் செல்லும் முன் வாக்களித்துச் செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுரை திருமங்கலத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடி உள்ள பகுதிக்கு வாக்காளர்கள் தவிர வேறு யாருமே நுழையாமல் தீவிர கண்காணிப்பு அமலில் உள்ளது. வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு?
» தமிழறிஞர்களின் படைப்புகளை மாட்டுவண்டிகளில் ஏற்றி வந்து கல்யாண சீர் அளித்த வாட்ஸ்அப் குழுவினர்
சென்னை மாநகராட்சியில் 51-வது வார்டு, புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள 1174 -வது எண் வாக்குச்சாவடி, 179-வது வார்டு பெசன்ட்நகர் ஓடைக்குப்பத்தில் உள்ள 5059-வதுஎண் வாக்குச்சாவடி மற்றும் மதுரைமாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 17-வது வார்டில் 17-வதுஎண் மகளிர் வாக்குச்சாவடி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி, 16-வது வார்டில் உள்ள16-வது எண் கொண்ட ஆண் மற்றும்பெண்களுக்கான இரு வாக்குச்சாவடிகள், திருவண்ணாமலை நகராட்சி, 25-வது வார்டில் உள்ள57-வது எண் கொண்ட ஆண் மற்றும் பெண்களுக்கான இரு வாக்குச்சாவடிகள் ஆகிய 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த 7 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்று மற்றும் அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த மறுவாக்குப்பதிவில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago