கொடைக்கானலில் குவிந்த வெளி மாநில சுற்றுலாப் பயணிகள்: சுற்றுலா தலங்களில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் வழிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேற்று கொடைக்கானலுக்கு வந்தனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊர்ந்து சென்றன. அப்சர்வேட்டரி சாலை ரோஜா கார்டன் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மோயர்பாய்ண்ட், குணா குகை, தூண் பாறை, பைன் பாரஸ்ட், கோக்கர்ஸ் வாக் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வலம் வந்து இயற்கை எழிலைக் கண்டு ரசித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

கொடைக்கானல் ம‌லையில் காலையில் வெயில் காணப்பட்டாலும், மாலையில் மேகக்கூட்டங்கள் திரண்டு வருவதால் இதமான குளிர் நிலவுகிறது. அதிகபட்சமாக பகலில் 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் குறைந்தபட்சம் 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்