ஊத்துக்கோட்டை அருகே கல்லூரி மாணவி ஹேமமாலினி தற்கொலை விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு பாஜக சார்பில் வலியுறுத்தப்படும் என, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டையில் ஓடை பகுதியில் முனுசாமி என்பவர், பழமை யான சிவன் கோயிலை மேம்படுத்திக் கட்டி, அங்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையும் அளித்து வருகிறார்.
இக்கோயிலில் கடந்த 13-ம்தேதி இரவு நடைபெற்ற பூஜையில், திருவள்ளூர் அருகே செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஹேமமாலினி(20) என்ற கல்லூரி மாணவிபங்கேற்றார். அவர், கடந்த 14-ம்தேதி காலை திடீரென விஷம் அருந்தினார். இதனால், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி, கடந்த 16-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹேமமாலினியின் பெற்றோர்தன் மகள் இறப்பில் சந்தேகம்இருப்பதாகக் கூறி, பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் போலீஸார், சந்தேக மரணம் என, வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹேமமாலினியின் பெற்றோரை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், நேற்று செம்பேடு கிராமத்தில் நேரில் சந்தித்து ஆறுதல்கூறினார். மேலும், ஹேமமாலினியின் பெற்றோரின் கோரிக்கைகள் குறித்தும் வானதி சீனிவாசன் கேட்டறிந்தார்.
அப்போது வானதி சீனிவாசன்செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கியநிலையில் கல்வி பயின்று வந்தமாணவி ஹேமமாலினியின் தற்கொலை துரதிருஷ்டவசமானது. அவரது உயிரிழப்பில் கோயில் நிர்வாகி மீது பெற்றோர் சந்தேகம்தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் மாணவிக்குச் சிகிச்சைஅளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, 'பிரச்சினையைப் பெரிதுபடுத்த வேண்டாம்' என ஆய்வாளர் கூறியதாக ஹேமமாலினியின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதிலேயே காவல் துறை அலட்சியமாகச் செயல்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
காவல் துறை விசாரணையில் பெற்றோருக்குத் திருப்தி இல்லை.ஆகவே, நேர்மையாக விசாரணையை நடத்த பாஜக சார்பில் முதல்வரிடம் வலியுறுத்தப்படும். இந்த விவகாரம் குறித்து தேசியமகளிர் ஆணையத்தின் விசாரணைக்கும் பாஜக சார்பில் வலியுறுத்தப்படும்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. பெண்களின் பாதுகாப்பு, எதிர்காலம் அச்சமளிப்பதாக உள்ளது.முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு குற்றம் இழைத்தவர் யாராக இருந்தாலும் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காவல்துறை விசாரணையில் திருப்தி இல்லையெனில் மாநில தலைவரிடம் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பாஜக அறிவிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago