திருவண்ணாமலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர் உள்ளிட்ட பெண்களை தாக்கிய திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் ஸ்ரீதரன் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சி 13-வது வார்டுக்கான வாக்குப்பதிவு, நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று முன் தினம் நடைபெற்றது. அப்போது அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட பெண் வேட்பாளர்களை மோசமான சொற்களால் திமுகவினர் திட்டி உள்ளனர். அச்சமயத்தில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட வரு வாய் அலுவலர் பிரியதர்ஷினி காலில் விழுந்து அதிமுக வேட்பாளர் சில்பி சகானா கதறி அழுதுள்ளார். இதற்கிடையில் காவல்துறையினர் முன்னிலையில் பாஜக வேட்பாளர் செண்பகவள்ளி, மாவட்ட பாஜக செயலாளர் சதிஷ்குமார் உள்ளிட்டவர்களை முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் தலைமையிலான திமுக வினர் ஆபாசமாக திட்டி தாக்கி உள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரி வித்து பாஜக சார்பில் திருவண் ணாமலை அறிவொளி பூங்கா முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரன் கண்டன உரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி என்ற மமதையில் திமுகவினர் செயல்பட்டுள்ளனர். இதில் முதன்மையான மாவட்டமாக தி.மலை மாவட்டம் உள்ளது. வாக்குப்பதிவு தொடங்கியதும், கள்ளவாக்குகளை திமுகவினர் பதிவு செய்ய தொடங்கிவிட்டனர்.
திமுகவில் இருந்து நீக்க வேண்டும்
திருவண்ணாமலையில் இரண்டு முறை நகராட்சி தலைவராக இருந்த ஸ்ரீதரன், திமுகவில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்ய வேண்டும். பெண் வேட்பாளரை தாக்கி உள்ளனர். கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர். ஆடைகளை களைத்துவிட்டு ஓட விடுவேன் என பெண்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இதுபோன்ற நபர்கள் கட்சியில் இருப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்று கொள்வாரா? இதற்கு நீதி கிடைக்க வேண்டும். ஸ்ரீதரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக புகார் அளிக் கப்பட்டுள்ளது. தாய் குலத்தின் மீது மரியாதை இருக்கிறது என்றால், திமுகவில் இருந்து தரனை நீக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மற்றும் 25-வது வார்டுகளிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. அனைத்துக்கும் வீடியோ ஆதாரம் உள்ளது. வீடியோ ஆதாரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை நகராட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ள அனைத்து வார்டுகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்” என் றார்.
இதில், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்டச் செயலாளர் சதிஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago