குடியரசு தினவிழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் அலங்கார ஊர்தி: சென்னையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது

By செய்திப்பிரிவு

சென்னை: குடியரசு தினவிழாவில் புறக்கணிக்கப்பட்ட விடுதலை போராட்ட தமிழக தலைவர்கள் இடம் பெற்ற அலங்கார வாகனத்தை சென்னையில் இன்று பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அரசு உள்பட பல மாநிலங்களில் அலங்கார வாகன ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது. கரோனா பரவலை காரணம் காட்டியதாக கூறினாலும் பாஜகவிற்கு ஆதரவு இல்லாத மாநிலங்களின் வாகனங்கள் புறக்கணிப்பதாக அரசியல் கட்சி பிரமுகர் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, டெல்லி பேரணியில் புறக்கணித்ததற்கு ஈடு செய்யும் வகையில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழ் தலைவர்கள் இடம் பெற்று இருந்த அலங்கார வாகன ஊர்திகள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து, விடுதலை போராட்டத்திற்காக போராடிய நமது தலைவர்களின் பெருமையை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில் அலங்கார ஊர்திகள் ஊர்வலம் மாவட்ட வாரிய நடைபெற்றது.

அனைத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிறைவு பெற்ற நிலையில், சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக தமிழ் தலைவர்களின் அலங்கார ஊர்தி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட 3 அலங்கார வாகன ஊதிகள் மெரினா கடற்கரை உள்ள மெரினா கலங்கரை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட 3 இடங்களில் அலங்கார ஊர்திகள் வைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE