கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் வாக்குச்சாவடிக்குள் வாக்குப்பதிவின்போது வாக்காளருடன் உடன் சென்ற கவுன்சிலர் வேட்பாளரால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உளுந்தூர்பேட்டை நகராட்சியில் நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, 1-வது வார்டுக்குரிய முதல் வாக்குச்சாவடி உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.
அப்போது 1-வது வார்டு திமுக கவுன்சிலர் வேட்பாளர் வைத்தியநாதன், வாக்குச் சாவடிக்குள் அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்தார். வாக்காளர் ஒருவர் வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்களித்தபோது, வேட்பாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட மேலும் இருவர் வாக்காளர் அருகில் நின்றுகொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர்.
அவ்வாறு எடுத்தப் படமும் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை நகாரட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணனிடம் கேட்டபோது, அவ்வாறு அனுமதிக்கக் கூடாது. வாக்குச்சாவடி அலுவலரிடம் இதுகுறித்து விளக்கம் பெறப்படும் என்றார்.
» வாக்குச்சாவடியில் ஹிஜாப் எதிர்ப்பு... பாஜக முகவர் வெளியேற்றம்... - மதுரை மேலூரில் நடந்தது என்ன?
» திருச்சி அருகே பேரூராட்சி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இந்த நிலையில், பிற்பகல் வரை வேட்பாளர் வைத்தியநாதன் வாக்குச் சாவடிக்குள் நின்று யார் யார் தனக்கு வாக்களிக்கின்றனர் என்பதை கண்காணித்தபடி இருந்தததால், மற்ற வேட்பாளர்களின் முகவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, காவலர்கள் அவரை வெளியேற்றினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago