திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு செய்தார். இம்மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் ஆகியவற்றில் மொத்தமுள்ள 401 வார்டுகளில், போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 வார்டுகளை தவிர எஞ்சிய 398 வார்டுகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் 21 சதவீதமும், காலை 11 மணியளவில் 29 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து, பிற்பகல் 1 மணியளவில் 42 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
இதன்படி, மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வார்டுகளில் மொத்தமுள்ள 10,62,590 வாக்குகளில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 4,46,288 வாக்குகள் பதிவாகியுள்ளன.
» கோவையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட சிறப்பு மேற்பார்வையாளர் ஆய்வு
» நீலகிரி: 55 பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள்; மெல்ல சூடுபிடித்த வாக்குப்பதிவு
உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக பேரூராட்சியில் 51 சதவீதமும், நகராட்சியில் 55 சதவீதமும், மாநகராட்சியில் 38 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago