சென்னை: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, நடிகர் விஜய் உள்ளிட்டோர் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே வாக்களித்தனர்.
உள்ளாட்சித் தேர்தல் அறிக 10 தகவல்கள்:
» நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களிப்பு
» இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
> நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
> மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
>1369 மாநகராட்சி, 3824 நகராட்சி மற்றும் 7409 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 12,602 இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.
>போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்கள், மரணம் அடைந்தவர்கள் தவிர்த்து, மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
>11,196 பேர் மாநகராட்சிகளிலும், 17,992 பேர் நகராட்சிகளிலும், 28,660 பேர் பேரூராட்சிகளிலும் போட்டியிடுகின்றனர்.
>தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 30,785 வாக்குச்சாவடிகளில் 2.83 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
> இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் சுமார் 1.33 லட்சம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
> நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வரும் பிப்.22-ல் அறிவிக்கப்படவுள்ளது.
>சென்னையில் 18,000 போலீசார், 4,000 ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
> முன்னதாக வாக்குச்சாவடி மையங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago