பதவியிலும், அரசியலிலும் தூய்மையை கடைபிடிக்கிறேன்; எந்த கோப்பையும் தாமதப்படுத்தியது இல்லை: பதவியேற்று ஓராண்டு நிறைவில் ஆளுநர் தமிழிசை பெருமிதம்

By செய்திப்பிரிவு

எந்த கோப்பையும் நான் தாமதப் படுத்தியதே இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரி வித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி கடந் தாண்டு பிப்ரவரி 16-ம் தேதி ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட் டார். இதையடுத்து தெலங்கானா ஆளுநரான தமிழிசை புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கடந் தாண்டு பிப்ரவரி 18-ம் தேதி புதுச் சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஓராண்டு நிறைவையொட்டி ஆளுநர் தமிழிசை நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கு தேநீர் விருந்து அளித்தார். புதுச்சேரியில் ஓராண்டு காலத்தில் பணியாற்றியது குறித்து புத்தகம், மின்நூல் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது:

புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கும், ஆளுநருக்கும் என்னென்ன அதிகாரமுள்ளது என்றுதெரியும். இது ஆளுநர் மாளிகை யல்ல, அலுவலகம் தான். கோப்புகளை பொருத்தவரை மக்களுக்குநல்லது என்ற அடிப்படையில்தான் முடிவு எடுக்கிறோம். எந்த கோப் பையும் தாமதப்படுத்தியதில்லை. நல் இதயத்திலிருந்து முடிவு எடுக்கி றேன். ஆளுநர் அலுவலகம் வெளிப்படையானது. இங்கு ஒளிவுமறைவோ, சுயலாபமோ இல்லை.காலை முதல் தொடர் பணிதரும் மருத்துவத்தில் இருந்துதான் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசிய லுக்கு வந்தேன். அதிகாரமுள்ள பதவியிலும், அரசியலிலும் தூய் மையை கடைபிடிக்கிறேன்.

மருத்துவராக இருந்ததால்தான் சாமானிய மக்களுக்கு நம்பிக்கைதரும் வகையில் அரசு மருத்துவ மனை இருக்க வேண்டும் என்று பணிகளை தொடங்கியுள்ளோம். வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சிகிச்சைக்கு வரும் வகை யில் அரசு மருத்துவமனைகள் அமைய வேண்டும். எந்த விஷயத்தையும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்ட உரிமையுண்டு. அதில் நல் லதை எடுக்கும் மனநிலையுண்டு.

ஆளுநர்கள் எப்படி வேண்டுமா னாலும் பணியாற்ற இயலும் என்றசூழல் இருந்தாலும் நான் உங்கள் சகோதரிபோல் பணியாற்றுகிறேன். ஏனெனில் எனக்கு ஈகோ கிடையாது. நேர்மறை எண்ணத்தோடு செயல் பட்டால் அது சிறப்பான பணியாக அமையும். புதுச்சேரியில் பாரதிக்கு வானுயர சிலை அமைக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் ஓராண்டு பணிகுறித்த, 'ஏ இயர் ஆப் பாசிட்டிவிட்டி' என்ற நூலின் முதல் பிரதியை முதல்வர் ரங்கசாமி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட் சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, சாய் சரவணன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பல ஆளுநர்களில் தமிழிசை மறக்க முடியாதவர்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

காலையில் புதுச்சேரி, மாலையில் தெலங்கானா, மறுநாள் டெல்லி என பறந்து பறந்து தனது பணிகளை செய்கிறார் ஆளுநர் தமிழிசை. அதற்கு மன தைரியம் தேவை. எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் நல்ல ஆளுநராக இருந்து அரசுக்கும், புதுச்சேரி வளர்ச்சியடையவும் அக்கறை காட்டுகிறார். சங்கடமான நிலை இல்லை. அனைத்து திட்டங்களும் செயல்படுத்த ஆளுநர் உறுதியாக உள்ளார். அரசு பொறுப்பேற்ற பிறகு நாங்கள் எண்ணிய பல நலத்திட்டங்களை செய்கிறோம். குறிப்பாக தீபாவளி, பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் வெள்ள நிவாரணம் வழங்க முடிந்ததற்கு காரணம் ஆளுநர்தான்.

கரோனா தொற்று காலத்தில் அரசுக்கு சிரமம் வைக்காமல், அதிகாரிகளை அழைத்து பேசி, மக்களை சந்தித்து முன்னின்று பணியாற்றினார். நான் முதல்வராக இருந்த காலத்தில் பணியாற்றிய பல ஆளுநர்களில் தமிழிசை மறக்க முடியாதவர். ஏனெனில் இரு மாநில பொறுப்பு ஏற்றிருந்தாலும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் தந்து உறுதுணையாக இருந்தார். கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேங்கியிருந்த நிலையில்லை. புதுச்சேரியை பசுமையாக்கவும், மருத்துவத்தில் சிறந்து விளக்க வேண்டும் என்பது அவருக்கு விருப்பம். அரசு இதை கவனத்தில் எடுக்கும், என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்