காரைக்கால் பிராந்தியம் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்படுகிறதா?- துணைநிலை ஆளுநர், முதல்வர் பாராமுகம் காட்டுவதாக பொதுமக்கள் வேதனை

By செய்திப்பிரிவு

புதுச்சேரி ஆட்சியாளர்கள் காரைக்கால் பிராந்திய நலனில் அக்கறை காட்டாமல், பாராமுகம் காட்டி தொடர்ந்து புறக்கணித்து வருவதாக காரைக்கால் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம்ஆகிய 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுச் சேரிக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை, நிலப்பரப்பு அடிப்படையில் பெரிய பிராந்தி யமான காரைக்கால் மற்ற பிராந்தியங்கள் அளவுக்கு வளரவில்லை என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால மனக்குறை.

புதுச்சேரியை ஆளும் அரசுகள், தொடர்ந்து காரைக்கால் பிராந்தியத்தை புறக்கணித்து வருவதாக கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டு இன்றும் தொடர்கதையாக இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும், புறக்கணிப்புக் காட்சிகள் மாறவில்லை என்ற வருத்தம் மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது. மேலும், காரைக்காலில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் நீடிக்கும் நிலையிலும் துணைநிலை ஆளுநரும், முதல்வரும் காரைக்கால் மீது போதுமான கவனம் செலுத்தாமல் பாராமுகம் காட்டுகின்றனர் என்கின்றனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக பொறுப்பேற்றது முதல் புதுச்சேரி பிராந்தியத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, ஆய்வுகள் மேற்கொள்வது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முதல்வரும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ஆனால், துணைநிலை ஆளுநர் ஓரிரு முறை மட்டுமே காரைக்கால் வந்துள்ளார். முதல்வராக என்.ரங்கசாமி பொறுப்பேற்றப் பின்னர் இதுவரை காரைக்காலில் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. இது காரைக்கால் மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் யூனியன் பிரதேச போராட்ட குழு பொதுச் செயலாளர் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு கூறியது: முந்தைய ஆட்சிக் காலத்திலும் காரைக்காலைச் சேர்ந்த யாரும் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்படவில்லை. தற்போதும் யாரும் நியமிக்கப்படவில்லை. காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பும் பறிபோனது.

காரைக்கால் நகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவேடுகளை பராமரிப்பதிலும், பிரெஞ்சு நடைமுறைப்படி திருமணங்களை பதிவு செய்வதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நீடிக்கின்றன. இது தனி மனித வாழ்வுரிமையையே பறித்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் அவல நிலை மிக நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவே நீடிக்கிறது. இதுபோன்ற மக்கள் பிரச்சினைகள் அதிகமாக உள்ளன.

புதுச்சேரியில் தமிழ் மொழி தெரிந்த ஆட்சியர் உள்ளார். துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளனர். மக்கள் அவர்களை சந்தித்துப் பேசி, பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடிகிறது. காரைக்காலில் தமிழ் தெரியாத ஆட்சியரும், முதுநிலை காவல் கண்காணிப்பாளரும் உள்ளனர். துணைநிலை ஆளுநரும், முதல்வரும் இங்கு வருவதில்லை. அதனால் மக்கள் தங்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள உள்துறை அமைச்சர் பலமுறை காரைக்காலுக்கு வந்தாலும், கட்சி நிகழ்ச்சிகளிலும், தனிப்பட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்று சென்றாரே தவிர, அவரும் மக்கள் பிரச்சினைகள் சார்ந்த ஆய்வுக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இதனால் காரைக்கால் வளர்ச்சி பின் தங்கியுள்ளதுடன், பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணப்படாமல் உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்