வெற்றி பெற்றால் மட்டுமே பலத்தை நிரூபிக்க முடியும்: மதுரையில் திமுக - அதிமுக தீவிர இறுதிக்கட்ட பணி

மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றினால் மட்டுமே தங்கள் பலத்தை நிரூபிக்க முடியும் என் பதால் அமைச்சர்கள், திமுக, அதி முக மாவட்டச் செயலாளர்கள் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில் மாந கராட்சி, மேலூர், திருமங்கலம், உசி லம்பட்டி ஆகிய 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இதில் வெற்றி பெறு வதில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதி முக கூட்டணியின்றி தவிக்கும் நிலையில், திமுக கூட்டணி அமைத்ததால் தவிக்கிறது.

அதிமுக நூறு வார்டுகளிலும் போட்டியிடுகிறது. திமுக கூட்ட ணிக்காக மாநகராட்சியில் 23 சதவீதம், புறநகரில் 10 சத வீதத்துக்கும் குறையாமல் வார்டு களை ஒதுக்கியுள்ளது. இந்த இடங்களில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் திமுகவினரையே நம்பி இருந்தனர்.

உழைப்பை மட்டுமே வழங்கும் திமுகவினர், பொருளாதார ரீதி யில் கண்டுகொள்ளவில்லை. இந்த வார்டுகளைக் குறி வைத்து அதிமுக தீவிரப்பணியாற்றியது. இதனால் திமுக போட்டியிடும் வார்டுகளில் வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

வார்டுவாரியாக கள நில வரத்தை நிர்வாகிகள், வேட் பாளர்களுடன் கட்சியின் மாவட்டச்செயலாளர்கள், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் தனித்தனியாக நேற்று ஆலோசனை நடத்தினர். உளவுப் பிரிவு போலீஸாரிடம் திமுகவினர் இறுதிக்கட்ட நிலவரத்தை அறிந்து கொண்டனர்.

தோல்வியைத் தவிர்க்க பண உதவி, சமுதாயத் தலைவர்களை சந்திப்பது, அதிருப்தியாளர்களை சரிக்கட்டுவது, போட்டி வேட் பாளர்களை சமாதானப்படுத்துவது, சுயேச்சைகளை இழுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண் டனர். திமுக ஆளும் கட்சியாக இருக்கும்போதே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வார்டுகளில் அதிமுக வெற்றிபெற்றால் பதவிக்கும், செல்வாக்குக்கும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் திமுக நிர்வாகிகள் தீவிரமாகப் பணியாற்றினர். அதிமுகவினரின் களப்பணி வேகத்தை குறைப்ப தற்கான பணிகளை தீவிரப்படுத்த கட்சியினருக்கு உத்தரவிட்டனர்.

அதிமுக குறிப்பிட்ட சதவீத வெற்றியைப்பெறாவிட்டால் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சோடை போய்விட்டதாகவும், தங்கள் செல்வாக்கு மீது கட்சி தலை மைக்கு சந்தேகம் எழும் எனக் கருதுகின்றனர். இது வரும் காலத்தில் போட்டியாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதனால் எப்படியாவது வெற்றியை கைவசப்படுத்த அதி முக நிர்வாகிகளும் சில நடவடிக் கைகளை மேற்கொண்டனர். புறநகர் பகுதியில் திமுகவினருக்கு நிகராக அதிமுகவினரும் கடைசி நேரத்தில் வாக்காளர்களை சந்திப்பில் ஆர்வம் காட்டினர்.

வாக்குப்பதிவு நாளில் களப் பணியில் காட்டும் தீவிரம் சில வார்டுகளின் வெற்றி, தோல்வி நிலவரத்தையே மாற்றும். எனவே அதில் கவனம் செலுத்த இரு கட்சி நிர்வாகிகளும் உத்தரவிட்டுள் ளனர். மாவட்டத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வெற்றியை மட்டுமின்றி, அக்கட்சியின் முக் கிய நிர்வாகிகளின் அரசியல் எதிர் காலத்தையும் இன்றைய தேர்தல் முடிவு செய்யும் என்கின்றனர் நிர்வாகிகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE