மரக்காணம் கலவரம் | இழப்பை வசூலிக்க தடையில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து பாமக மேல்முறையீடு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மரக்காணம் கலவரத்தின்போது ஏற்பட்ட இழப்பை வசூலிக்க தடையில்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2013-ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது ஏற்பட்ட மரக்காணம் கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், 2013 ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேதத்தின் இழப்பை வசூலிப்பது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே மணிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி 2014-ல் வழக்கு தொடர்ந்தார். அதில், கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து பாமகவினர் விடுதலை செய்யப்பட்டனர். எனவே அரசியல் உள்நோக்கத்துடன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, கலவரத்தின் போது 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும், பல கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி, பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீட்டை வசூலிக்க எவ்வித தடையும் இல்லை எனவும் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டார். அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, நோட்டீசை ரத்து செய்யவும் மறுத்துவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி. கே.மணி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்