வெளியூர் நபர்கள் தங்குவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் விடுதிகளில் போலீஸார் சோதனை

By செய்திப்பிரிவு

சென்னை: வெளியூர் நபர்கள் தங்குவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப்.19) நடைபெற உள்ளது. கடந்த 2 வாரங்களாக அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

இதற்கிடையே, கள்ள ஓட்டுபோடுவதைத் தடுக்கவும், கலவரங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்துக்காக வெளியூர்களில் இருந்து ஆட்கள் ஆங்காங்கே விடுதிகளில் தங்கி இருந்தனர். நேற்றுடன் பிரச்சாரம் முடிவடைந்ததால், அன்றையதினமே வெளியூர் நபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, நேற்று மாலை முதல் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். வெளியூர் நபர்கள் தங்கி இருந்தால், அவர்கள் எதற்காக வந்துள்ளனர், அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த சோதனை நடந்து வருகிறது.

இதேபோல் கடைசி நேர பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் நோக்கில் தேர்தல் பறக்கும் படையினரும், கலவரங்கள் மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாராவது வருகிறார்களா, வெடி பொருட்கள், ஆயுதங்கள் எதுவும் இருக்கிறதா என உள்ளூர் போலீஸாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, 74 ஆயிரம் போலீஸார், தமிழக சிறப்பு காவல் படையினர் 8 ஆயிரம் பேர், ஊர்க்காவல் படையினர் 14 ஆயிரம் பேர் என தமிழகம் முழுவதும் 96 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்