சிதறியது அதிமுக அணி; வலுப்பெற்றது திமுக கூட்டணி: விசிக தலைவர் திருமாவளவன் கருத்து

தேர்தல் அறிவித்த ஓரிரு நாளில் அதிமுக கூட்டணி சிதறியது. திமுக கூட்டணி வலுப்பெற்றுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் 30-வது வார்டில் மோகனா, 71-வது வார்டில் முனியாண்டி போட்டியிடுகின்றனர். இவர்கள் உட்பட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று பிரச்சாரம் செய்தார்.

மதிச்சியம், மாடக்குளம், கரும் பாலை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது: தேர்தல் அறிவித்தவுடன் அதிமுக கூட்டணி சிதறியது. உடையாமல் இருக்கும் திமுக கூட்டணி இத்தேர்தல் மூலம் வலுப்பெற்றுள்ளது. பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை பற்றி இந்து சட்டம் சொல்கிறது. இதை ஆர்எஸ்எஸ் தடுக்கிறது. இந்து மக்களை ஜாதி ரீதியாக பிரிக்க முயலும் பாஜகவின் செயல் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE