மதுரை: வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா மும்முரம்: அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதாக சுயேச்சைகள் புகார்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சியில் திமுக, அதிமுகவினர் பணப்பட்டு வாடாவைத் தொடங்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியைக் கைப்பற்ற திமுக, அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தெற்கு, மேற்கு, வடக்கு, மத்திய தொகுதிகளில் 3-ல் திமுக வெற்றிபெற்றது. மேற்கில் மட்டும் செல்லூர் கே.ராஜூ வெற்றிபெற்றார்.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை திமுக முழுமை யாக நிறைவேற்றாதது, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி, குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றால் ஆளும்கட்சி மீது மக்களிடையே அதிருப்தி நில வுவதாகக் கூறப்படுகிறது. இது திமுகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திமுகவிலும், அதி முகவிலும் சீட் கிடைக்காத நிர் வாகிகள் சிலர், கட்சிகளின் அதி காரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக சுயேச்சைகளாக களம் இறங்கி உள்ளனர். இது தவிர, இரு கட்சிகளிலும் உள்ள சிலர் உள்ளடி வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இரு கட்சிகளை தாண்டி சில வார்டுகளில் பாஜகவுக்கும், சுயேச்சைகளுக்கும் செல்வாக்கு உள்ளது. அதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த முறை திமுகவிலும், அதிமுகவிலும் வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமையும், மாவட்டச் செயலாளர்களும் தேர்தல் செல வுக்குக்கூட பணம் வழங்கவில்லை. கடைசி நேரத்தில் பூத் கமிட்டிக்கு மட்டும் பணம் வழங்க வுள்ளதாகக் கூறப்படுகிறது.

அன்றாட தேர்தல் செலவுகளை வேட்பாளர்களே தங்கள் சொந்த பணத்தில் செலவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் வெற்றியை உறுதி செய் வதற்கு பிரச்சாரம் உள்ளிட்ட களப்பணியையும் தாண்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடாவை பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தொடங்கி யுள்ளனர். ஓட்டுக்கு ரூ.300 முதல் ரூ.1,000 வரை வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் சிலர் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையில் ஓட்டுக்கு பணம் வழங்க சம்பந்தப்பட்ட வார்டுகளில் உள்ள வாக்காளர்களின் மொபைல் எண்களை சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, திமுக, அதி முகவினரின் பணப்பட்டுவாடா குறித்து, தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தாலும், அதை தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சுயேச்சைகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE