சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிர்வாகக் காரணங்களால்...
நடப்பு கல்வி ஆண்டுக்கான (2021-22) ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான திருத்தப்பட்ட கலந்தாய்வு குறித்த அறிவிப்பு ஜன. 28-ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களால், பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 15-ம் தேதி (நேற்று) முதல் நடைபெற இருந்த பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago