கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை என்று கோயில் தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும் சிற்றம்பல மேடைக்கு பக்தர்கள் செல்வது கோயில் நிர்வாகத்தால் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 3 தினங்களுக்கு முன்பு, ஜெயசீலா என்றபெண், சிற்றம்பல மேடையில் ஏற முயன்றார். அப்போது தீட்சிதர்கள் அவரை தடுத்து வெளியே தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக சிதம்பரம் காவல்நிலையத் தில் அப்பெண் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள் சார்பில்ஐயப்ப தீட்சிதர் என்பவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சக்திகணேச தீட்சிதர், அவரது மகன் தர்ஷன் தீட்சிதர் ஆகியோர் கோயிலுக்கும் தீட்சிதர் சமூகத்துக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சில துஷ்பிரயோகமான செயல்களை தீய சக்திகளுடன் சேர்ந்து செய்து வருகின்றனர்.
கோயிலில் எந்தவித தீண்டாமையும்இல்லை. கிறிஸ்தவ மதத்தினரும் வருகிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தினரும் வருகிறார்கள். இந்து சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுபக்தர்களும் கோயிலுக்கு வருகிறார்கள். யாரையும் தவறாக பேசுவது இல்லை. கோயிலின் நலன் கருதி சில சட்ட திட்டங்கள் வகுத்துகனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும்ஏறக்கூடாது என உத்தரவு போடப்பட்டு, எல்லோரும் அதை கடைபிடித்து வருகிறார்கள்.
தீட்சிதர்கள் சக்தி கணேசன், தர்ஷன் மட்டும்விதிமுறைகளை மதிக்காமல் சம்பந்தம் இல்லாத பெண்களை கனகசபைக்கு அழைத்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவத்தில், தான் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோயிலில் அனுமதி மறுக்கப்படுவதாக ஒரு பெண் தவறுதலான புகாரை தெரிவித்து இருக்கிறார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு தர்ஷன் தீட்சிதர் கோயிலில் ஒரு பெண் பக்தரை அடித்து பிரச்சினை செய்ததால் அது சட்டங்களை மீறியதாககருதி, அவருக்கு அபராதம் விதித்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். தற்போது பழி தீர்ப்பதற்காக இதுபோன்ற வேலைகளை செய் கிறார். மேலும் கோயிலில் நடந்த நிர்வாகக் கூட்டத்தில், நிர்வாகத்துக்கு எதிராக கருத்துகளை கூறியதற்காக தர்ஷன் தீட்சிதருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை செலுத்த தவறினால் மீண்டும் சஸ்பென்ட் செய்யப்படுவார். இவ்விவகாரத்தில் சக்தி கணேசன் தீட்சிதர், காவல் நிலையத்தில் தன்னை தாக்கியதாக பொய் புகார் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது யாரும் ஏறவேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில், பூஜையில் யாரும் தலையிடக் கூடாது என்று நீதிமன்ற உத் தரவும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய தர்ஷன் தீட்சிதர், “நடராஜர் கோயிலில்தீட்சிதர்கள் எப்படி சுவாமி தரிசனம் செய்கிறார்களோ, அதேபோல் பக்தர்களும் தரிசனம் செய்ய வேண்டும். கோயிலில் நடைபெறும் சில அநியாயங்களை எனது தந்தையும் நானும்தட்டிக் கேட்பதால், எங்களை கோயில் நிர்வாகத்தினர் மிரட்டுகிறார்கள். அடிக்கிறார்கள். ‘பக்தர்களை கனகசபையில் ஏற்றக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதுமன்னர் கட்டிய கோயில். காலம் காலமாக கனகசபையில் ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நடைமுறை மீண்டும் வர வேண்டும்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 secs ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago